[ad_1]

மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ஆர்.கே.நகர் வெற்றியை ஈட்டி இருப்பதாகத் தி.மு.க உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 





தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. 





உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2ஜி மூலம் பல லட்சம் கோடி இழப்பு எனத் தொடரப்பட்ட வழக்கு பொய்யானது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் மூலம் வெற்றி ஈட்டப்பட்டுள்ளது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு, பெரும்பான்மையை இழந்துவிட்ட அ.தி.மு.க அரசுப் பதவி விலக வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");