[ad_1]

“தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளால் நான் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தேன். அதனால்தான், விழிப்பு உணர்வு குறும்படங்களை இயக்கி வருகிறேன் இப்படிச் சொல்பவர் ஒரு சமூக ஆர்வலர் இல்லை. கோவை டிராஃபிக் போலீஸான ராக்கி மகேஸின் வார்த்தைகள் இவை.

ரியலிலும், ரீலிலும் நாம் எத்தனையோ வித போலீஸ்களை பார்த்திருப்போம். ஆனால் அவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி, துப்பாக்கிகளுக்கும், லத்திகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, கேமராவுடன் விழிப்பு உணர்வு குறும்படங்களை எடுத்துவருகிறார் ராக்கி மகேஸ் என்ற கோவை டிராஃபிக் போலீஸ்.