[ad_1]



ருக்மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆள்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எனக்கு தினேஷ்குமார், ஜெயசூர்யா என இரு மகன்கள் உள்ளனர். கடந்த 7-ம் தேதி என் கணவர் 2 வது மகன் ஜெயசூர்யாவுடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள என் சகோதரர் கதிரேசன் வீட்டுக்குச் சென்றனர். அன்று மதியம் 2.30 மணியளவில் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் என் சகோதரர் மகன் கோகுலகிருஷ்ணனும் என் மகன் ஜெயசூர்யாவும் செல்ஃபி எடுப்பதற்காக வைகை ஆற்றுக்குச் சென்றனர்.



அழகர் ஆற்றில் இறங்கும் இடம் அருகே வைகைக்கரையில் செல்ஃபி எடுக்கும்போது மண் சரிந்து இருவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். அப்போது, ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் ஆற்றில் குதித்து கோகுலகிருஷ்ணனை உடனடியாக மீட்டனர். ஜெயசூர்யாவை மீட்க இயலவில்லை. கோரிப்பாளையம் முதல் வண்டியூர் பாலம் வரை தேடியும் ஜெயசூர்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் ஜெயசூர்யா மாயமாகி 12 நாளாகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, ஜெயசூர்யாவைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி சுப்பையா, ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகனைத் தேடும் பணி தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");