[ad_1]
பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பிறகான நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) முறை நாடு முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலானது. ஜி.எஸ்.டி அமலானது முதல், பெட்ரோலியப் பொருள்களையும், அந்த வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி தேவேந்திர கௌட், ‘பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கிழ் அரசு எப்போது கொண்டு வரும்’ என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ``ஜி.எஸ்.டி தொடர்பாக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில் பெட்ரோலியப் பொருள்களை இந்த வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்ற நிலையே இருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி-யில் இருந்து பெட்ரோலியப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்ற முடிவை ஜி.எஸ்.டி கவுன்சிலே எடுத்தது. எனவே, பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவர நமக்கு புதிய சட்டம் தேவையில்லை. ஆனால், ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவெடுத்த பின்னரே, இதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். அரசும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது'' என்றார்.
பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் எப்போது கொண்டுவரப்படும்? - அருண் ஜெட்லி பதில்
TAGS :
COMMENTS