[ad_1]





இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.




ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி  ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். 

குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, '' தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஜஸ்ப்ரீத்தை சந்தித்து வாழ்த்த வேண்டும். அதற்கு, என் மருமகள் அனுமதிப்பார் என்று நம்புகிறேன்''  என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்துவிட்டார். 

அகமதாபாத் போலீஸ் கூறுகையில், '' ஜஸ்ப்ரீத்துக்கு கடந்த 5-ம் தேதி பிறந்தநாள். அப்போது, அவரை நேரில் சந்தித்து வாழ்த்த சந்தோக் சிங் சென்றும் முடியவில்லை. இதையடுத்து டிசம்பர் 8-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை''  என்று தெரிவித்துள்ளது. 


சந்தோக் சிங்கின் மகள் ரஜீந்தர்,  ''நானும் தந்தையும் நேரில் சென்று தல்ஜித் சிங்கை சந்தித்து ஜஸ்ப்ரீத்தைப் பார்க்க அனுமதிக்குமாறு வேண்டியும் மறுத்துவிட்டார். ஜஸ்ப்ரீத்தின் போன் எண் கூட தர மறுத்துவிட்டார். அதிலிருந்து என் தந்தை மிகுந்த வேதனையில் இருந்தார்'' என்று போலீஸில் கூறியிருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");