[ad_1]
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். அவர்களில் சிலர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் எனக் குமரி மீனவக் கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.தூத்தூரில் ஐந்தாவது நாளாக நடக்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவ மக்களைச் சந்திக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், ''அரசு மக்களால் ஏற்படுத்தப்பட்டது. பேரிடர் நடந்தால் போர்கால நடவடிக்கையில் அரசு நிவிர்த்தி செய்ய வேண்டும். கேரளாவில் அதுபோல நிவிர்த்தி செய்யப்பட்டு நிவாரணம் கொடுக்கப்படுகிறது. 842 மீனவர் இலங்கை அரசு சுட்டுக்கொலை செய்ததுக்கு நிவாரணம் இல்லை. இப்போது குமரியில் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆய்வு அறிக்கை தேவையில்லை. உயிரிழப்பு, பயிரிழப்புக்கு நிவாரணத்தை அரசு கொடுக்க வேண்டும். மக்களுக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு மக்களைச் சந்திக்க பயம். குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க முதல்வர் வாயைத் திறக்கவில்லை. சின்னத்தை, பதவியைக் காப்பாற்ற பிரதமரைச் சந்தித்தவர்கள் மக்களுக்காகப் பிரதமரைச் சந்திக்கவில்லை. உலக அழகிக்கு டிவிட்டரில் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார். மக்கள் துயரத்தில் அவர் பங்கெடுக்கவில்லை.தமிழனை ஆந்திராவில் சுட்டால் கேள்வி இல்லை. விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் செத்தால் வருத்தம் இல்லை. மீனவர்களை காணவில்லை. அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தமிழனை மீட்க அரசு தயக்குகிறது. நிவாரணம் ஏழு ஆண்டு கழித்து கொடுக்கப்படுகிறது. அதுவரை வாழ்வது எப்படி. இறந்தவர்களின் உடலைக்கூட கொண்டு வர முடியாத அரசு அமைந்துள்ளது. கேரளாவில் 9 ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை. 20 லட்சம் நிவாரணம். நம் மீனவர்களையும் அவர்கள் மீட்டுக் கொண்டுவருகிறார்கள். அரசு அதிகாரம் மக்களை கைவிட்டுவிட்டது. புயலில் காப்பாற்றாமல் போனவர்கள் அணு உலை பாதுகாப்பு என்று சொல்கிறார். அதிக வளம் கொண்ட மாநிலம் தமிழகம். இங்கு அமைச்சர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள கோடிக்கணக்கான பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுக்க வேண்டும். நிர்மலா சீதாராமன் பொறுப்பற்ற நிலையில் மீனவர்கள் விசயத்தில் பதில் சொல்கிறார். வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கி உள்ள மீனவர்களை ஏன் மீட்க வில்லை. ராணுவம் எதுக்கு இருக்கிறது. பேரிடரில் பாதுகாக்கத் தவறிய அரசு வளர்ச்சி பற்றி பேச அருகதை கிடையாது. கட்சி சார்ந்த மீனவ சங்கங்களை மட்டும் முதல்வர் சந்திப்பார் .பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்திக்க மாட்டார்'' என்று ஆவேசமாகப் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
உலக அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மக்கள் துயரத்தில் பங்கெடுக்கவில்லை! குமரி போராட்டக்களத்தில் பொங்கிய சீமான்
TAGS :
COMMENTS