[ad_1]
மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் எது பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்ற கணக்கீட்டை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் செய்துள்ளது.
அதன்படி, பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் குறைவாக நடைபெறும் நகரங்களில் இந்திய அளவில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நகராக நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது. மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணக் காப்பகம் மேலும், 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 1 லட்சம் பெண்களில் 12 பேர்தான் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், 75.8 லட்சம் பெண்கள் டெல்லியில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றங்களுக்காக 13,803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவலைத் தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழக காவலர்கள் வழக்குகள் குறித்து விரைந்து விசாரணை நடத்துகிறார்கள். 544 வழக்குகளில் 402 வழக்குகளில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 153 பேருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு முதலிடம்; டெல்லிக்கு கடைசி இடம்!- எதில் தெரியுமா?
TAGS :
COMMENTS