[ad_1]





புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ-க்களுக்குச் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்த அரசு சார்பு செயலர் சட்டசபை உரிமை மீறல் குழுவிடம் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.





புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், கண்ணன், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால் மாநில அரசின் பரிந்துரையின்றியும், உரிய விதிமுறைகளை கடைபிடிக்காமலும் எம்.எல்.ஏ-க்கள் நியமிக்கப்பட்டதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்தினார் சபாநாயகர். அதனால் அந்த மூன்று பேருக்கும் ஆளுநர் மாளிகையில் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் கவர்னர் கிரண்பேடி. பதவிப் பிரமாணச் சான்றிதழ் மற்றும் புதுச்சேரி அரசிதழில் வெளிவந்த அரசாணையை சட்டமன்றச் செயலரிடம் அளித்த நியமன எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்குமாறு மனு அளித்தனர்.



ஆனால், உரிய அதிகாரம் பொருந்தியவரிடமிருந்து தனக்கு உத்தரவில்லை என்று கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களின் நியமனத்தை ரத்துசெய்வதாக அறிவித்தார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் ஓரிரு தினங்களில் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேருக்கும் சம்பளம், தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்டவைகளை உடனே வழங்குவதோடு அது குறித்த அறிக்கையையும் உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவருக்கும் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க சட்டசபை செயலருக்கு அரசு சார்பு செயலர் கண்ணன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவையும் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.





இந்நிலையில் ”நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் சொல்லாத நிலையில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் உள்ளாட்சித் துறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 30 தொகுதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே 3 நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு நிதி ஒதுக்க உத்தரவிடுவது என்பது சபாநாயகரின் உத்தரவையும், சட்டசபையையும் அவமதிப்பது மட்டுமல்ல சபையின் உரிமையையும் மீறும் செயல். எனவே இதை அவையின் உரிமை மீறலாக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசு கொறடா அனந்தராமன் சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக்குழு விசாரிக்க அனுமதி வழங்கினார். அதையடுத்து புதுச்சேரி அரசு சார்பு செயலர் கண்ணன் 2018 ஜனவரி 2-ம் தேதி சட்டசபை உரிமைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க பேரவை உரிமைக் குழு உத்தரவிட்டிருக்கிறது.
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");