[ad_1]
மதச்சார்பின்மை குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
கர்நாடகாவில் ஒரு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, 'மதச்சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்றவேண்டும்' என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூனா கார்கே கடும் கண்டனம் தெரிவித்தார். ஹெக்டே தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்போது பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'அம்பேத்கருக்கு அவமரியாதை செய்ய யாருக்கும் தகுதி இல்லை. அனந்தகுமார் ஹெக்டே பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்துவதுபோல இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டார். இதனால் அவருடைய தகுதி ஒன்றும் குறைந்து விடாது என்று கூறினார். அதன்பின்பு பேசிய அனந்தகுமார் ஹெக்டே, 'நான் பேசிய பேச்சு தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் என்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை' என்று மன்னிப்பு கோரினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மதச்சார்பின்மைகுறித்து சர்ச்சைப் பேச்சு..! மத்திய அமைச்சர் அனந்த குமார் மன்னிப்பு கோரினார்
TAGS :
COMMENTS