[ad_1]





ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கிய விஷயம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. 




சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக நாதுராம், தினேஷ் சௌத்ரி என்கிற இருவரைப்  பிடிக்க ராஜஸ்தானுக்கு தமிழகப் போலீஸார்  தனிப்படை அமைத்துச் சென்றிருந்தனர். ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்தவர்களைப் பிடிக்க, தமிழக போலீஸார் முயன்றனர். அப்போது, இரு தரப்புக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிமீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டிகுறித்து உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நிலக்கிழார் செல்வராஜ் என்பவரின் மகன்தான் பெரியபாண்டி. இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார். பி.எஸ்சி படித்த பிறகு 2000-ம் ஆண்டில் போலீஸ் துறையில் சேர்ந்தார். கிட்டத்தட்ட 17  ஆண்டுகளுக்குப் பிறகு, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். 

சாலைப்புதுர் கிராமத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த நிலத்தைக்கூட அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தானமாக எழுதி வழங்கியுள்ள பெரிய பாண்டியின் மரணம் அந்த கிராம மக்களைப் பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. சமூக அக்கறையுடன் கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படும் பெரியபாண்டி, இரு மாதங்களுக்கு முன்தான், மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றலாகி வந்துள்ளார். 


சென்னையில் ஆவடி வசந்த் நகரில் உள்ள நேரு தெருவில் வசித்துவந்த அவருக்கு ஒரு மகன் உள்ளார். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஏற்கெனவே சென்ராம், சங்கர்லால் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");