[ad_1]
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்மஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக தினகரன் நாகர்கோவில் வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, `அருமனை கிறிஸ்துமஸ் விழா பல தடைகளைத்தாண்டி நடைபெறுகிறது. அரசியல் பண்ண முடியாமல் மத கலவரங்களை தூண்டுவதற்க்காக செய்த சதியாக விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியே இல்லாமல் போய்விடும். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ இருப்பது எல்லா அமைச்சர்களுக்கும் தெரியும். குமரி மாவட்டத்தில் புயல் வந்ததே தமிழக அமைச்சர்களுக்கு தெரியாதது போல இருக்கிறது. பதினான்கு நாள்கள் கழித்து முதல்வர் தூங்கி எழுந்துவிட்டு குமரி மாவட்டம் வந்தார். இப்படி அவரின் செயல்பாடுகள் இருக்கும்போது, ஜெயலலிதாவின் வீடியோ ஆதாரம் எப்படி அவர்களுக்கு தெரியப்போகிறது' என கொந்தளித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த ஆட்சி இருக்காது!' - தினகரன் திட்டவட்டம்
TAGS :
COMMENTS