[ad_1]
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க இப்போதிலிருந்தே திட்டம் தீட்ட வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பார்க்க அவரின் குடும்பத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை குல்பூஷணின் மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அலுவலக அமைச்சகத்துக்குச் சென்றனர். அங்கு குல்பூஷண் மனைவியின் தாலி, வளையல், மெட்டி, நெற்றிப் பொட்டு ஆகியவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தினராம். தாலி, மெட்டி உள்ளிட்டவற்றைக் கழட்டிய பின்னர்தான் குல்பூஷணை சந்திக்க அனுமதிக்கப்பட்டனராம். இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி ‘மகாபாரதத்தில் திரௌபதியின் துகிலுரிந்த நடவடிக்கை, மகாபாரதப் போருக்கு வழிவகுத்தது. அதேபோன்று தற்போது குல்பூஷணின் மனைவிக்கு நடந்த அவமதிப்புக்கு பாகிஸ்தானுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்.இந்தியா இனியும் பொறுத்திருக்கக் கூடாது. பாகிஸ்தான் மீது போர் தொடுத்து அந்த நாட்டையே நான்கு கூறாக்க வேண்டும். இது இப்போதே நடக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், போருக்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`இந்தியா இனியும் பொறுத்திருக்கக் கூடாது' - பாகிஸ்தானுக்கு எதிராகச் சீறும் சுப்பிரமணியன் சுவாமி
TAGS :
COMMENTS