[ad_1]

மேற்கு வங்கத்தின் சபாங் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.




தமிழகத்தில் கடந்த 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது. அதே 21-ம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் சபாங் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 21-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலே வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிதா ராணி புனியா முன்னிலையிலேயே இருந்து வந்தார்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அதிகாரப்பூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தல் முடிவில் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிதா ராணி புனியா வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ரிடா மோண்டல் இரண்டாம் இடமும், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அந்தாரியா பட்டாச்சாரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது தற்போது நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 


 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");