[ad_1]
தேனி மாவட்டத்தில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கு பிச்சை எடுத்து வந்தனர். அவர்களை மீட்ட சில தன்னார்வலர்கள், அவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துவிட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்துவிட்டனர் என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்தின் கவனத்திற்குச் செல்ல, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ஆதரவற்றோர் இல்லங்களின் நிர்வாகிகளையும் அழைத்து, தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் படி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டம் முழுவதிலும் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் ஆங்காங்கே இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டனர். பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ’இனி பிச்சை எடுக்கக் கூடாது…’ என்ற நிபந்தனையின் பேரில் சேர்க்கப்பட்ட அனைவரும், தற்போது மீண்டும் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையும் அதிகமானது. தற்போது மீண்டும் அவர்களை பிடித்து ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டம் என்ற பட்டத்தை தக்கவைத்துகொள்ள மாவட்ட நிர்வாகம் போராடிக்கொண்டிருக்கிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டம் இப்போது எப்படி இருக்கிறது?
TAGS :
COMMENTS