[ad_1]
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29 இரவிலும், மறுநாள் பகலிலும் ஒகி புயலால் பேரழிவு ஏற்பட்டது. 200 படகுகளில் ஆழ்கடல் பகுதிக்கு மீ்ன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில், 42 மீனவக் கிராமங்களில் வாழும் 80 ஆயிரம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். ஒகி புயல் தொடர்பாக மத்திய, மாநில அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை.
ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கு ஒக்கி புயல் தொடர்பான எந்தத் தகவலும் தெரியவில்லை. இதனால் அவர்கள் புயலில் சிக்கிக்கொண்டனர். அவர்களை ஹெலிகாப்டரை அனுப்பி மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. நவம்பர் 31-ம் தேதியே மத்திய, மாநில அரசுகள் கடல் பகுதியில் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள்.
மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியபோது, 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரியவந்தது. மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்துவருகின்றனர். இதனால், மாயமான 551 மீனவர்களையும் கண்டுபிடித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்டுத் தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு..!
TAGS :
COMMENTS