[ad_1]

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மோடிக்கு விளையாட்டு வீரர்களின் நலன் சம்பந்தமாகக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.




அக்டோபர் 24-ம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் நகல் இப்போது பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் சச்சின், சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களை மத்திய அரசின் மருத்துவத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்ற முகமது ஷாகித் தன் இறுதிக்காலத்தில் மருத்துவச் செலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்ட சம்பவத்தை தன் கடிதத்தில் சச்சின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதைய நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பலன்பெற முடியும். இதில் சர்வதேசப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களையும் சேர்த்தால் அது அவர்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாய் இருக்கும். இதுசம்பந்தமாக தான் ஏற்கெனவே மத்திய விளையாட்டு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்குத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் சச்சின் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.