[ad_1]
தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அடியெடுத்து வைத்த 1991-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு எதிராக 12 டெஸ்ட் தொடர்களில் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தலா 6 தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன.
இந்தநிலையில், வரும் ஜனவரி 5-ல் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ’தி ஃப்ரீடம் சீரிஸ்’ என்று பெயர்வைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’கடந்த 1991-ம் ஆண்டு கிரிக்கெட் உலகில் காலடியெடுத்துவைக்க உதவிய இந்தியாவுக்குச் செய்யும் கைமாறாக இந்தத் தொடருக்கு ’ஃப்ரண்ட்ஷிப் சீரிஸ்’ என்றுதான் முதலில் பெயரிடவிருந்தோம்.
நிறவெறிக்கு எதிரான நாடுகளில் முக்கியமானது இந்தியா. அகிம்சை வழியில் போராடிச் சுதந்திரம் பெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளின் வரலாற்று பாரம்பர்யத்தை அங்கீகரிக்கும் சிறந்த பெயராக ’தி ஃப்ரீடம் சீரிஸ்’ இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்குப்பின் இருநாடுகளிடையே இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து டெஸ்ட் தொடர்களும் இதேபெயரால் அழைக்கப்படும். மேலும், தி ஃப்ரீடம் சீரிஸ் தொடருக்கான பிரத்யேக கோப்பை முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் ஜனவரி 13-லும், மூன்றாவது டெஸ்ட்போட்டி ஜோஹன்னஸ்பெர்க்கில் ஜனவரி 24-லிலும் தொடங்குகின்றன. அதன்பின்னர், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றிலும் இந்திய அணி விளையாடுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களுக்குப் புதிய பெயர்!
TAGS :
COMMENTS