[ad_1]
ஊரில் நாம் பார்க்கும் பக்கமெல்லாம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் தற்போது கண்ணில் படுவதே அரிதான நிகழ்வாகிவிட்டது. மாறிவரும் காலநிலை, மனிதர்களின் வாழ்க்கை முறை, சூழலியல் சீர்கேடுகள் என அந்தச் சின்னஞ்சிறு பறவை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் மிகமிக அதிகம். குறிப்பாக, அதிகரித்துவரும் செல்போன் டவர்கள் மற்றும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் இவற்றிற்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படாத காரணத்தால் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, தினம்தினம் வாழ்வதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன சிட்டுக்குருவிகள். இதற்கு முதன்மையான காரணம் மனிதர்கள்தாம். சிட்டுக்குருவிகளுக்கான உணவு, வாழ்விடம், காலநிலை என எல்லா விதத்திலும் அவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்திய மனிதன், அவற்றை நேரடியாகவே வேட்டையாடவும் தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த ஓர் அதிர்ச்சிச் சம்பவம்.
திருச்சி அருகில் முனியாஸ் எனும் அரியவகை குருவிகளை விற்ற 3 பேரைக் கைது செய்துள்ள வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 330 குருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் முனியாஸ் குருவிகள் விற்கப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்குத் தகவல் கிடைக்க, திருச்சி வனச்சரக அலுவலர் எம். பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி, வனக்காவலர்கள் தங்கவேலு, ஜான்ஜோசப் உள்ளிட்ட வனக்குழுவினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்டவாய்த்தலை சந்தை அருகில் 3 பேர், பறவைகளை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், சிலம்பரசன், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் குருவி உள்ளிட்ட பறவையினங்களைப் பிடித்து உணவுக்காக விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் முனியாஸ் சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த 310 பறவைகளும், உயிருடன் 20 பறவைகளும் என மொத்தம் 330 முனியாஸ் சிட்டுக்குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் சூட்டைத்தணிக்கும், மூல வியாதிகளுக்கு ஏற்றது எனப் பல்வேறு தகவல்களைக் கூறி விற்பனை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் குருவிகளைக் கொண்டு ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிக்கலாம் என்று பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவக் குணமுள்ள முனியாஸ் வகை சிட்டுக்குருவி, அளவில் சிறியதாக இருந்தாலும், ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால், சிலர் தோகைமலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை குருவிகளை வேட்டையாடி வருவதும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் பழங்காவிரி என்ற பகுதியில் அரியவகை குருவிகளை மாமிசமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த கிளி உள்ளிட்ட பறவையினங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!
TAGS :
COMMENTS