[ad_1]





Coimbatore: 

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வருகையை முன்னிட்டு, கோவை தி.மு.க-வினர் அட்ராசிட்டி செய்தனர்.




2 ஜி வழக்கு தீர்ப்புக்குப் பிறகு, ஆ.ராசா இன்று கோவை வந்தார். வழக்கில் இருந்து விடுதலை ஆனதால், கொங்கு மண்டலத்தில் ராசாவின் மவுஸ் கூடியுள்ளது. இதனால், அவரை வரவேற்க கோவை மாநகர்  மட்டுமன்றி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆட்கள் களமிறக்கப்பட்டனர். ஏராளமான டெம்போ, பஸ், வேன், மினிடோர்களில் மக்கள் கூட்டம், கோவை விமான நிலையத்துக்கு வந்திறங்கினர். அவருக்கு, அங்கு மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல, அவர் செல்ல திட்டமிட்டுள்ள பாதைகளில் எல்லாம், பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவினாசி சாலை முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


 


அண்மையில், கோவையில் நடந்துமுடிந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேனர் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது. ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசை தி.மு.க செயல்தலைவர் கடுமையாக விமர்சித்தார். தற்போது, உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் பேனர் வைக்க தடைவிதிப்பதற்கு முன்பே, தி.மு.க சார்பில் பேனர் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், எந்த ஒரு கலாசாரத்தை எதிர்த்தார்களோ, அதையேதான், அதுவும் ஒரு தலைவரின் வருகைக்காக தி.மு.க-வும் செய்கிறது. இந்த உபதேசங்கள் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா செயல் தலைவரே? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");