[ad_1]
உலகளாவிய சினிமாவில், பெருமிதமாகக் கருதப்படும் விருது, ஆஸ்கர். இந்த வருடத்தின் விருதுகளுக்கான ஆரம்ப தேர்வுப் பட்டியல்களை ஆம்பாஸ் (அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ்) குழுமம் வெளியிட்டுவருகிறது. சிறந்த பாடலுக்கான பட்டியலில், மலையாளப் படமான 'புலிமுருகன்' படத்தின் பாடல்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் குத்துப்-எ-க்ரிபா குழு இசையமைத்த 'லேக் ஆஃப் ஃபயர்' படத்திலிருந்து பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
ஆம்பாஸ், சிறந்த பாடலுக்கான பட்டியலை அண்மையில் வெளியிட்டது. மொத்தம் தேர்வாகியுள்ள 70 பாடல்களில், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப் பள்ளியின் மாணவர்களை உள்ளடக்கிய 'குத்துப்-எ-க்ரிபா' குழு இசையமைத்த, 'லேக் ஆஃப் ஃபயர்' படத்தின் 'ஹேவ் யு எவர் வொண்டர்ட்', 'ஐ வில் பி கான்', 'வி வில் பார்டிஆள் நைட்' ஆகிய மூன்று பாடல்களும் மோகன்லால் நடிப்பில் கோபி சுந்தர் இசையமைத்த 'புலிமுருகன்' படத்தில் வரும் 'காடனையும் கால்சிலம்பே' மற்றும் மானதே மாரிகுரும்பே' ஆகிய இரண்டு பாடல்களும் தேர்வாகியுள்ளன.இந்த 70 பாடல்களிலிருந்து ஆம்பாஸ் உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சிறந்த 5 பாடல்கள் இடம்பெறும் இறுதிப் பட்டியல், 2018 ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியலில் இருக்கும் பாடல்களில் ஒன்றே, 'பெஸ்ட் ஒரிஜினல் சாங்' விருதுபெறும். 2018 பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற இருக்கும் ஆஸ்கர் கான்செர்ட் மேடையில் அரங்கேற்றப்படும்.
2018 மார்ச் 4-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள 90-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். முன்னதாக, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'நியூட்டன்' என்ற இந்தி திரைப்படம், இறுதிப் பட்டியலில் இடம்பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் குத்துப்-எ-க்ரிபா பாடல்!
TAGS :
COMMENTS