[ad_1]





Salem: 


சேலம் சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷன் அண்ட் சேலம் சிவில் இன்ஜினீயர்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் பிரமாண்டமாக 19 வது கட்டுமான பொருள்களின் கண்காட்சி சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி வரும் 11-ம் தேதி வரை நடைபெறும்.




இதுபற்றி சேலம் சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷனின் சேர்மன் மயில்ராஜ், ''இந்தக் கண்காட்சியை நாங்கள் 18 நடத்தி வருகிறோம். தற்போது தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சி 19 வது கண்காட்சி இன்று தொடங்கியிருக்கிறது. இந்தக் கண்காட்சியின் மூலம் புதியதாக வீடு கட்டுபவர்கள் அல்லது கட்ட நினைப்பவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களின் விவரங்களையும் நவீன யுத்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

உதாரணத்துக்கு தற்போது மணல் தட்டுபாடு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் மணலுக்கு மாற்றுப் பொருளான எம்சென்ட் பற்றிய விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும். மரம் வெட்டுவதைத் தவிர்க்க பிளாஸ்டிக்காலான ஜன்னல், கம்பிகள் என அனைத்து விதமான பொருள்களும் இருக்கிறது. இந்தக் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுவதோடு, பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பல கட்டுமான பொருள்கள் பற்றிய அனுபவமும் கிடைக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு இந்தக் கண்காட்சியைத் தொடங்கியிருக்கிறோம்.


எங்களுடைய சேலம் சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷன் மூலமாகச் செயல்படும் அறக்கட்டளையில் 'நாளைய பொறியாளர்கள்' என்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்து சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிறைய சிறந்த பொறியாளர்களை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்து வருகிறோம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");