[ad_1]
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த 16-ம் தேதி டெல்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். அந்தப் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர். `ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய திசையில் பயணிக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் புதிய தலைமை மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்’ எனத் தொண்டர்களிடம் உருக்கமாக உரையாற்றினார் சோனியா காந்தி.
இந்நிலையில் ராகுலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “லட்சியப் பார்வையுடன் கூடிய ராகுலின் தலைமை நம் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டுக்கும் உரிய பணியையும் கடமைகளையும் ராகுல் ஆற்றுவார் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
உங்களது பெருமைமிகு குடும்பத்தின் அறிவார்ந்த அணுகு முறையில் நம் நாடும் மக்களும் மேம்பாடு அடைந்திட வேண்டும்.
நாட்டின் மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை, மனித நேயம், ஆகிய உயரிய நன்னெறிகள் ராகுலின் ஆளுமை மிக்க தலைமையால் மேலும் பலப்பட வேண்டும். ராகுல் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புகளை செவ்வனே செய்து வெற்றியடைந்திட வாழ்த்துகிறோம்” என்றுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு கி.வீரமணி வாழ்த்து
TAGS :
COMMENTS