[ad_1]
டோக்லாம் எல்லைப்பகுதியில் உருவான பதற்றத்தால், இந்தியா - சீனா இடையேயான நல்லுறவில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சூழலை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா வந்திருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, புதுடெல்லியில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசிய பின்னர், சீனா புறப்பட்டார். அவர், புதுடெல்லியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டோக்லாம் விவகாரம் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்லாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன், சீன அரசு சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மிகப்பெரும் பதற்றம் உருவானது. இரு நாடுகளின் ராணுவப் படைகளும் இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்பட்டு, போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர், டோக்லாம் பகுதியில் பணிகளை சீன அரசு விலக்கிக்கொண்டதையடுத்து பதற்றம் தணிந்தது. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலும் அரங்கேறியது.
இந்த நிலையில் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சீன அமைச்சர் வாங் யீ, மத்திய அமைச்சருடன் இருதரப்பு உறவுகள்குறித்து ஆலோசனை நடத்தினார். சிக்கிம் எல்லைப் பகுதியில் 73 நாள்கள் நீடித்த டோக்லாம் பதற்றம் பற்றி அப்போது இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதுபற்றி சீனா சார்பில் உடனடியாக அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.
பின்னர் சீன அமைச்சர் டெல்லியிலிருந்து புறப்பட்டதும், அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நிலவவில்லை என்றும், அது திருப்திகரமான வகையில் அமையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டோக்லாம் போன்ற பதற்றமான சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்றும், அது இருதரப்பு உறவுகள் தொடர்பான ஒரு பாடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'டோக்லாம்' பதற்றம் இரு நாடுகளுக்கும் ஒரு பாடம் - சீனா!
TAGS :
COMMENTS