[ad_1]
சென்னை வேளச்சேரி முதல் சின்னமலை வரை மாணவர்கள் மேற்கொண்ட ஆபத்தான பேருந்து பயணம் பயணிகளைப் பதறவைத்தது.
சென்னையில் அண்மைக் காலமாகப் பேருந்துகளில் மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வந்தது. காவல்துறையினர் தற்போது முடிவு கட்டியுள்ளனர். ஆனால், பேருந்துகளில் மாணவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமாகப் பயணத்தைத் தடுக்கத் தவறி வருகின்றனர். மின்னல் வேகத்தில் செல்லும் பேருந்துகளில் இருந்து இறங்குவதும் ஏறுவதும் பயணிகளைப் பதறவைக்கிறது.
தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு நேற்று காலை A51 பேருந்து வந்துக்கொண்டிருந்தது. வேளச்சேரி பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஏறினர். பேருந்து படிக்கட்டில் நின்றுகொண்டு பாட்டுப்பாடி பேருந்தைக் கைகளால் தட்டி ஒரே அமர்க்களப்படுத்தினர். இதை நடத்துநரும் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் கடும் எரிச்சல் அடைந்தனர். பின்னர், விஜயநகரம் பேருந்து நிலையத்தில் ஏறிய மற்றொரு அரசுப் பள்ளி மாணவர்கள் இதே அமர்க்களத்தில் ஈடுபட்டு வந்தனர். காந்திநகர் பேருந்து நிலையத்தில் பைக்கில் வந்த காவலர் ஒருவர், பேருந்தின் படிக்கட்டில் தொடங்கிய மாணவர்களை அடித்து உள்ளே செல்லும்படி கூறினார். உள்ளே சென்ற மாணவர்கள், காவலர் சென்றவுடன் மீண்டும் அமர்க்களம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் மூன்று மாணவர்கள், பெண் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் திடீரென ஏறினர். இதைப் பார்த்து பயணிகள் பதறினர். கீழே இறங்குங்கள் என்று பயணிகள் கூறினார்கள். அதைச் செவிடன் காதில் விழுந்த சங்குபோல் அந்த மூன்று மாணவர்களும் பயணித்தனர். மாணவர்களின் இந்த அட்ராசிட்டி வேளச்சேரியில் இருந்து சின்னமலை வரை தொடர்ந்தது. சின்னமலை வந்தவுடன் பேருந்தில் இருந்து சர்வசாதாரணமாக மாணவர்கள் இறங்கிச் சென்றனர். யார் பெற்ற பிள்ளைகளோ என்று பயணிகள் முணுமுணுத்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பயணிகளைப் பதறவைத்த மாணவர்கள்! வேளச்சேரி டு சின்னமலை வரை நடந்த அட்ராசிட்டி!
TAGS :
COMMENTS