[ad_1]

  

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்கிற ராணுவ வீரர் மற்ற நான்கு வீரர்களோடு கடந்த 12ம் தேதி பனிச்சரிவில் சிக்கி இறந்தார். அவரது உடலை, ஏழு நாள்கள் கழித்துத்தான் ராணுவத்தினர் கண்டுபிடித்து மீட்டனர். அவரது உடல் இன்று காலை ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.



இதுபற்றி விசாரித்தோம். "காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி அவர்களது இறுதிச்  சடங்கு அவரது சொந்த ஊரான கடவூர் வட்டம், தோகமலை அருகிலுள்ள கொசூர் ஊராட்சி நாதிப்பட்டி கிராமத்தில் உள்ள நாச்சிகளத்துப்பட்டியில் இன்று (24-12-17) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் தமிழக அரசு சார்பாக பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். மூர்த்தியின் உடல் ராணுவ மரியாதையுடன் மதியம் இரண்டு மணி போல நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது" என்றார்கள்.
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");