[ad_1]
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டத் தேர்தல் முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இன்று பாலன்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, “பாகிஸ்தான் ராணுவ முன்னாள் அதிகாரி குஜராத் தேர்தலில் தலையிடுகிறார். அவர் அகமது பட்டேலை ஏன் குஜராத் முதல்வராக்க விரும்புகிறார்? பாகிஸ்தான் தூதர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். மணிசங்கர் அய்யர் வீட்டில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மணிசங்கர் அய்யர், துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மூன்று மணிநேரம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகுதான் மணிசங்கர் அய்யர் என்னை மோசமாக விமர்சனம் செய்தார்” என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை சமீபத்தில் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து அவர் மீது கட்சிரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
'குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு!' பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு
TAGS :
COMMENTS