[ad_1]
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் அமைந்துள்ளன பொட்டிபுரம், புதுக்கோட்டை, சின்னபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், குப்பனாசாரிபட்டி ஆகிய கிராமங்கள். இந்திய அணுசக்திக் கழகத்தின் நியூட்ரினோ திட்டத்தை இப்பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கு இப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே... திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி, விரைந்து நியூட்ரினோ திட்டத்தை முடிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மீண்டும் நியூட்ரினோ வந்துவிடுமோ... என்ற அச்சத்தில் உள்ள இப்பகுதி மக்களை, கடந்த ஆறுமாத காலமாக அச்சுறுத்திவருகிறது மணல் கொள்ளை.
நிலச்சீர்திருத்தம் எனும் பெயரில் மணல் கொள்ளை:
ஒருபுறம் நியூட்ரினோ திட்டத்தால் தங்கள் பகுதிகளில் இருக்கும் இயற்கை வளம் பறிபோய்விடுமோ என்ற பதற்றம், மறுபுறம் இடைவிடாது அள்ளப்படும் மணலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவது என பொட்டிபுரம் வட்டாரக் கிராமங்கள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மலையடிவாரத்தில் பரவியிருக்கும் மணலை, அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களிடம் பேரம் பேசி தற்போது மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள் சில மணல் மாஃபியாக்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்தவித பாரபட்சமும் இல்லாமல், மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்திருப்பதுதான் வேடிக்கையான உண்மை. இது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளுடன் பேசியபோது, “அவர்கள் பட்டா நிலத்தில் மணல் அள்ளுகிறார்கள். மேலும், அப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் செய்ய பட்டா நில உரிமையாளர்கள் எங்களிடம் அனுமதி கேட்டார்கள். அதன்படி அனுமதி கொடுத்திருக்கிறோம். மற்றபடி வேறெந்த விதிமீறலும் நடைபெறவில்லை'' என்று கூறினர். 20 அடிக்கு மேல்தான் நிலச்சீர்திருத்தம் நடக்குமா என்ன? என்று கேட்கத்தோன்றுகிறது. அரசு அனுமதித்ததைத் தாண்டியும் பல அடிகளுக்கு மேல் மணலைச் சுரண்டிவரும் கூட்டத்தைக் கண்டித்தும், தங்கள் பகுதி நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே போவதால், ‘மணல் குவாரிகளை மூட வேண்டும்' என்று வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கால் இழந்த சிறுவன்:
விதிமீறி மணல் அள்ளுவது மட்டுமல்லாமல், மணலை ஏற்றிக்கொண்டு இரவு பகல் பாராமல் அதிவேகமாக கிராமங்களின் குறுகிய சாலைக்குள் செல்லும் லாரிகளால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற டிராக்டர் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவன் யுவன் மீது மோதியது. இந்த விபத்தில், மாணவன் யுவன் தனது வலது காலை இழந்திருக்கிறான். யுவன் நம்மிடம் பேசும்போது, “சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து வேன்ல வீட்டுக்கு வந்தேன். கீழே இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணேன். வேகமா வந்த டிராக்டர் என் மேல மோதி நான் கீழே விழுந்து மயங்கிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது... எனக்கு ஒரு கால் இல்லைனு. என் கிளாஸ்ல எல்லாரும் பி.டி பீரியட்ல விளையாடுவாங்க. நான் கிளாஸ் ரூம்ல உக்காந்திருப்பேன். ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்றான்.
அதிவேகத்தில் செல்லும் இதுபோன்ற மணல் லாரிகளில் சிக்கி இன்னும் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் யுவன் குடும்பத்தினர். 'யுவனுக்கு ஏற்பட்டதுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது' என்ற எண்ணத்தில், தங்கள் கிராம மக்களை அழைத்துக்கொண்டு ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளனர் யுவனின் பெற்றோர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் வெங்கடாசலம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஓடித்திரியும் வயதில் ஊன்றுகோலோடு யுவன்.!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“எல்லோரும் விளையாடும்போது நான் வேடிக்கை பார்ப்பேன்” - மணல் கொள்ளையால் கால் இழந்த சிறுவன்
TAGS :
COMMENTS