[ad_1]

Chennai: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி அருகே பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.




தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. நேற்றைய இரவு நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்திலேயே புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினரும், நூறு பேர் கொண்ட மத்திய ரிசர்வ் படையினரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன பண்டிபோரா பகுதியைச் சேர்ந்த ஒமைஸ் அகமது ஷேக் என்கிற அபுகம்சா வின் இரண்டாம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று புல்வாமா பகுதியில் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டது. இதற்கிடையில் நள்ளிரவில் இதுபோன்ற சம்பவம் பொதுமக்களை பதற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தொடர்நது இது போன்ற தாக்குதல் நடைபெறுவது மக்களை அச்சம் அடையச் செய்கிறது.

 

முன்னதாக திங்களன்று, நள்ளிரவு காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள ராவல்கோட் அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். நிலைமையை உணர்ந்த இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");