[ad_1]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரிந்துரையின்மூலம் கூடுதலாக வாங்கப்படும் லட்டு,வடை பிரசாத விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இது அங்குள்ள சமூக அமைப்புகள், பக்தர்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சாதாரண லட்டு விலை ரூ. 25-லிருந்து 50 ஆகவும், கல்யாண உற்சவ லட்டின் விலை ரூ.100 -லிருந்து 200 ஆகவும், வடை விலை ரூ.25-லிருந்து ரூ.100 ஆகவும் விலை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், தரிசன டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் பிரசாத விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், தற்போது தேவஸ்தானம் தயார்செய்யும் 25 ரூபாய் சிறிய லட்டுக்கு 37 ரூபாயும், பெரிய லட்டுக்கு (கல்யாண உற்சவ லட்டு) 150 ரூபாயும், வடை தயார் செய்ய 80 ரூபாயும் செலவாகிறது. ஆனால், தற்போதுவரை தேவஸ்தான அதிகாரிகள் கையெழுத்திட்ட சிபாரிசுக் கடிதங்களில் ஒரே விலை இருந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் சிபாரிசுக் கடிதங்கள் மூலமாக வழங்கப்படும் லட்டுகளின் விலையை எந்தவித தகவலுமில்லாமல் திடீரென உயர்த்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன், தனியார் நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவோருக்கு மட்டும் லட்டு விலை உயர்த்தப்படும் என்று திருமலை கோயில் நிர்வாக அதிகாரி அறிவித்திருந்தார். பக்தர்கள் கூடுதல் லட்டு வாங்கினாலும் தற்போதுள்ள அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. இதற்காகவே, பக்தர்கள் கோயிலுக்கு வந்துசென்றதன் அடையாளமாக நினைப்பது லட்டு என்பதால், விலை அதிகரித்தாலும் வாங்குவதற்குத் தயங்குவதில்லை. தங்களிடைய செலவுகளைக்கூட சுருக்கிக்கொண்டு பக்தர்கள் லட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுகளின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
TAGS :
COMMENTS