[ad_1]





உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான புதிய வரைவுப்பட்டியல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்டக்குழு, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி வார்டு எல்லைகள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்ட வரைவுப்பட்டியல் கடந்த 2017 ஜனவரி 28-ம் தேதி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவுப்பட்டியலில் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் வருகின்ற 2.1.2018 மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமோ மாவட்ட ஆட்சியரிடமோ நேரிலோ; பதிவுத் தபால் மூலமோ தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்டகால இடைவெளியில் மறுசீரமைப்புச் செய்யப்படுகின்ற இந்த வரைவுப் பட்டியலை பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் முன்னாள் மற்றும் வருங்கால உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் முறையாக ஆய்வுசெய்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்திட ஐந்தே 5 நாட்களை அதுவும் 2 நாள்கள் பொது விடுமுறையைக்கூட கவனத்தில் கொள்ளாமல் ஒதுக்கியுள்ளது ஏற்புடையது அல்ல.

அவசர காலத்தில் அள்ளித் தெளித்ததுபோல் இல்லாமல் உள்ளாட்சி அமைப்பு வார்டுகளின் எல்லைகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க வகையில் மேற்கொள்வதற்கு வசதியாக அவர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அளவை தொடர்ந்து வரும் பொங்கல் விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டு 2018 ஜனவரி 25 வரை நீட்டித்திட தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");