[ad_1]
Kancheepuram: ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்து பல்வேறு கருத்துகளை தலைவர்கள் தெரிவித்துவருகிறார்கள். ’பா.ஜ.க-வின் மாயமானாக ரஜினியின் கட்சி அமைந்துவிடக் கூடாது. அதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும்’ என கி.வீரமணி கருத்து தெரிவித்திருக்கிறார்.
செங்கல்பட்டில் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவராக இருந்து மறைந்த கோபால்சாமியின் படத்திறப்பு விழா நடைபெற்றது. அதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கடந்த 30 ஆண்டுகளாக திராவிடர் கழகத்தில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர் கோபால்சாமி. அவரின் கழகப் பணிகள்குறித்து மல்லை சத்யா தனது நினைவுகளை வெளிப்படுத்திப் பேசினார்.
விழா முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வீரமணி, “இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவருடைய கொள்கை என்ன... அவருடைய லட்சியம் என்ன... யாரை எதிர்த்து அவர் நிற்கிறார்? இதையெல்லாம் அவர் தெளிவாகக் கூற வேண்டும். அதன் பிறகு, அவர் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதை முடிவுசெய்வோம். எதுவாகிலும், இது பெரியாரின் பகுத்தறிவு பூமி. திராவிட இயக்கத்தின் மண்ணில் அதன் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாக யாராக இருந்தாலும் இங்கு வேரூன்ற முடியாது. பா.ஜ.க-வின் மாயமானாக ரஜினியின் கட்சி அமைந்துவிடக் கூடாது. அதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும். ஆன்மிகக் கொள்கை என்று சொல்கிறார் ரஜினி. அதுதான் மாயமான்” என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'பா.ஜ.க-வின் மாயமான் ரஜினி, திராவிட மண்ணில் வேரூன்ற முடியாது!' - கி.வீரமணி காட்டம்
TAGS :
COMMENTS