[ad_1]
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷண் ஜாதவ்வை அவரது தாய் மற்றும் மனைவி சில நாள்களுக்கு முன்னர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, குல்பூஷணிடம் இருவரையும் சரிவர பேசவிடாமல் தடுத்தது பாகிஸ்தான் அரசு. மேலும், குல்பூஷண் மனைவியின் காலனிகளை வலுக்கட்டாயமாக வாங்கி வைத்துக்கொண்டது பாகிஸ்தான். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்திய தரப்பிலிருந்து அந்நாட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம்குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.
அப்போது அவர், `தாயுடனும், மனைவியுடனும் நடந்த சந்திப்பை பாகிஸ்தான் தவறான பிரசாரத்துக்குப் பயன்படுத்திவருகிறது. குல்பூஷணின் மனைவி எவ்வளவு கேட்டும், பாகிஸ்தானால் வாங்கப்பட்ட அவரது காலணிகள் திரும்பக் கொடுக்கப்படவில்லை. அவர் அணிந்திருந்த காலணியில் ரெக்கார்டரோ கேமராவோ இருந்தது என்று பாகிஸ்தான் கூறுகிறது. இது அபத்தத்தின் உச்சம். ஏனென்றால், அவர் அந்தக் காலணிகளுடன் இரண்டு விமானத்தில் பயணம் செய்தார். அப்போதெல்லாம் இது எப்படி தெரியாமல் இருந்தது. குல்பூஷணின் குடும்பத்தினருக்கு இருக்கும் உரிமைகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அவர்கள் மனதில் பயத்தை விதைத்திருக்கிறார்கள். சேலை மட்டுமே கட்டும் குல்பூஷணின் தாயாரை சல்வார் - குர்தா போடச் சொல்லி பணித்திருக்கிறார்கள். குல்பூஷணின் தாய் மற்றும் அவரது மனைவி நெத்தியில் வைத்திருந்த குங்குமம், வளையல்கள் ஆகியவை அகற்றச் சொல்லப்பட்டுள்ளது. விதவைகளைப் போல அவர்களை மாற்றிய பிறகுதான் குல்பூஷணைச் சந்திக்க அனுமதி கொடுத்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. குல்பூஷணின் தாயார், அவருக்குத் தெரிந்த மொழியான மராத்தியில் பேச அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் அவர் பேச முயன்றபோது, இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் அவரைத் தடுத்தனர். பிறகு இன்டர்காம் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்' என்று வருத்தத்துடன் கூறி, தனது கண்டனங்களை பதிவுசெய்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
`குல்பூஷணின் மனைவியை விதவையைப்போல மாற்றினர்!' - பாகிஸ்தானுக்கு எதிராக சுஷ்மா ஸ்வராஜ் காட்டம்
TAGS :
COMMENTS