[ad_1]



 ஓர் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக்கொண்டு உருவாவது, ஐ.சி.சி கனவு அணி. ஒவ்வோர் ஆண்டும் ஆண் பெண் கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி-யின் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட் அணியில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றனர்.



ஒருநாள் கிரிக்கெட் அணியில், இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்  மித்தாலி ராஜ், பந்துவீச்சாளர் ஏக்தா பிஷித்தும் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேதர் நைட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டிக்கான அணியில், இந்தியாவைச் சேர்ந்த அதிரடி வீரர் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஏக்தா பிஷித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக, வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெய்லர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளிலும் ஏக்தா பிஷித் இடம்பெற்று, பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.  
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");