[ad_1]





கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 




Photo Credit: LSTV

வாராக்கடன் பிரச்னையைக் கையாள மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும், அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திவால் சட்டத் திருத்தத்தை கடந்த நவம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இதற்கு மாற்றாக திவால் சட்டத் திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத் திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர், குரல் வாக்கெடுப்பு வழியாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 


இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வாராக்கடன் நிறுவனங்களின் சொத்துகள் ஏலம் விடப்படும்போது, அந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது. கடன் மோசடி செய்த நிறுவனங்கள் நிறுவன அமைப்புகளைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நிதியை வேறு வகையில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இந்தச் சட்டம் மூலம் அபராதமாக ஒரு லட்சம் மூலம் ரூ.2 கோடி வரை விதிக்கலாம். மசோதாவைத் தாக்கல் செய்து மக்களவையில் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘வாராக்கடன் உருவாகக் காரணமானவர்கள், பின்வாசல் வழியாக கம்பெனி நிர்வாகத்தை கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றார். இந்த மசோதா மாநிலங்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");