[ad_1]

இன்று நாடாளுமன்றத்தில் லோக் சபா கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.




நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி கூடியது. இந்தத் தொடரில், குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இன்று எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் லோக் சபா கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை ஒகி புயலால் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த மக்களுக்கும் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 


பின்னர் நடந்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்திப் பேசினர். இதனால் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆனால், முடிவு எட்டாததால் காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கூச்சலும் குழப்பமும் தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் முதலில் பகல் வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் பிற்பகலிலும் அதே நிலை நீடித்ததால் நாளைவரை அவையை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");