[ad_1]





கேரள அமைச்சர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை ஒகி புயல் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.


 


கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயல் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை. ஒகி புயலின்போது கடலுக்குச் சென்ற கேரள மற்றும் தமிழக மீனவர்கள் மாயமாகினர். கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பலரை மீட்டது. ஆனால், மாயமான மீனவர்களின் எண்ணிக்கையைக்கூட தமிழக அரசால் தெளிவாகக் கூறமுடியவில்லை என்று கொந்தளித்து வருகின்றனர் மீனவக் குடும்பத்தினர். கேரளாவை பொறுத்தவரை திருவனந்தபுரம், கோட்டையம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒகி புயலின்போது சேதம் ஏற்பட்டது. அப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மத்திய அரசு ஒகி புயலைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரினார். ஆனால் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துவிட்டார்.  இதனையடுத்து பினராயி விஜயன் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிறப்பு நிவாரண நிதி குழு ஒன்றை அமைத்தார். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் தங்களால் முடிந்த நிதி வழங்குமாறு பினராயி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் கேரள அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். கேரள அமைச்சரவை உறுப்பினர்களின் இந்த முடிவை பலதரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஒகி புயல் வீசி முடிந்து 14 நாள்கள் கடந்துவிட்டது. இத்தனை நாள்களுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரிக்குச் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");