[ad_1]



 சென்னை போயஸ்கார்டனில் ஓராண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அறை திறந்து சோதனை நடந்தது. 



 ஜெயலலிதா சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர், குடியிருந்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதுகூட ஜெயலலிதாவின் அறை திறக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்தநிலையில், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக சென்னை கலெக்டர் அன்புசெல்வன், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இன்று அங்கு சென்று ஆய்வு நடத்தினர். தற்போது, ஓராண்டாகப் பூட்டியே இருக்கும் ஜெயலலிதாவின் அறையைத் திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் அங்கு வந்துள்ளனர். கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு சோதனை நடந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த அறை திறக்கப்பட்டு அங்கிருந்து சசிகலாவுக்கு எதிராகப் பூதங்கள் கிளம்புமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");