[ad_1]
“மணல் தட்டுப்பாட்டால், தமிழ்நாடு முழுக்க கட்டட கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இருபது நாள்களுக்கும் மேலாக நாங்கள் வேலைக்குப் போகாமல் அல்லாட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால், டெல்டா விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை பண்ணிகிட்ட நிலைமைதான் எங்களுக்கும் ஏற்படும்” என்று கண்ணீரோடு கதறுகிறார்கள் தமிழ்நாடு முழுக்க உள்ள கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள்.
மணல் குவாரிகளை மூடச்சொல்லி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதனால், தமிழக அரசு 'தமிழகத்தில் திறக்க நினைத்த 70 மணல்குவாரிகளைத் திறக்க முடியவில்லையே' என்று கையைப் பிசைந்து வருகிறது. இதனால், கலக்கத்தில் இருப்பது மணலை கொள்ளை கொள்ளையாக அள்ளி, கோடி கோடியாக சம்பாதித்த ஆளுங்கட்சி புள்ளிகள்தாம். இன்னொருபக்கம், தமிழகம் முழுக்க மணல் தட்டுப்பாட்டால் கட்டட வேலைகள் பாதியில் நிற்கின்றன. அதோடு, கட்டடப் பணிகளை மட்டுமே நம்பியிருந்த இரண்டு கோடிக்கும் அதிகமான கட்டுமான, பிளம்பர், பெயின்ட் அடிப்பவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இருபது நாள்களுக்கும் மேலாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிமென்ட் முதலாளிகளுக்கு மூக்கணாங்கயிறு போட அரசு சிமென்ட் கொண்டுவந்த மாதிரி, அரசே அரசு மணல் திட்டத்தை கொண்டுவரணும். அப்போதான், மணலை வியாபாரமாக்குவது குறையும். கட்டடத் தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பிலிருந்து புது கோரிக்கை கிளம்பியிருக்கிறது.
இது தொடர்பாக, ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பின் கரூர் மாவட்டத் தலைவர் சக்திவேலிடம் பேசினோம். "ஒருமாத காலமாக மணல் தட்டுப்பாடு நிலவுவதால், கட்டடம் கட்டும் தொழில் முற்றிலும் முடங்கியிருக்கிறது. இதனால், கட்டட கட்டுமான தொழிலை மட்டுமே நம்பியுள்ள பிளம்பர், கொத்தனார், பெயின்டர், எலெக்ட்ரீஷியன், கார்பென்டர், சித்தாள் உள்ளிட்ட கூலி ஆட்களின் வாழ்வாதாரம் கடந்த இருபது நாள்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சாப்பிடுவதற்கே வழியற்று அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய சூழலில் இருக்கிறது. இப்படி, தமிழகம் முழுக்க கட்டடத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் இரண்டு கோடி பேர்கள் இருப்பாங்க. அதுல, கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக, ஆளுங்கட்சியினர் முறைகேடாக மணலை கடத்தி,வெளிமாநிலங்களுக்குக் கடத்துவதை நாங்க ஆதரிக்கலை.
மணல் அள்ளும் உரிமையை அந்தந்த பகுதி மக்களுக்குக் கட்டட தேவைகளுக்கு ஏற்ப அள்ளிக்கலாம்ன்னு அனுமதி தரணும். வேறு பகுதி மக்கள் இன்னொரு பகுதி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது. அதுவும், அரசியல்வாதிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் வியாபார ரீதியில் மணல் அள்ள அனுமதிக்கவே கூடாது. அப்படி அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சணும். இல்லைன்னா, மணல் அள்ளும் அவர்களைத் தடுக்காத அந்தப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர், வி.ஏ.ஓ, ஆர்.ஐ.க்களை சஸ்பென்ட் பண்ணலாம்.
தமிழகத்தில் பல ஆயிரம் பலிகளை ஏற்படுத்திய கள்ளச்சாராயத்தை ஒழிக்க அப்போதைய அரசு இந்த முறையைத்தான் கையாண்டு வெற்றி கண்டது. ஒருவேளை ஆறு இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அரசின் அனுமதியோடு அருகில் உள்ள ஆறு பகுதிகளுக்குப் போய் கட்டட தேவைகளுக்கு மட்டும் மணல் அள்ளிக்கொள்ளலாம் என்று அனுமதிதரலாம். அரசு கட்டடங்கள் கட்ட அரசே தேவையான மணலை மட்டும் அள்ளிக்கொள்ளலாம்ங்கிற முறையைச் செயல்படுத்தணும். அப்போதான், மணல் கொள்ளையும் தடுக்கப்படும்; மணல் தட்டுப்பாடும் நீங்கும். இருண்டு கிடக்கும் கட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளிபிறக்கும்” என்றார்.
அடுத்து பேசிய, ஏ.ஐ.டி.யூ.சி தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், “இல்லைன்னா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு சிமென்ட் கொண்டு வந்ததுமாதிரி, அரசே அரசு மணல் திட்டத்தை கொண்டு வரலாம். அவங்க ஆட்சியில சிமென்ட் விலையை தனியார் கம்பெனிகள் மூட்டை 400 வரை விலை வைத்து விற்றார்கள். இதனால்,கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே, 'விலையைக் குறைக்கும்படி' பத்து கம்பெனி சிமென்ட் கம்பெனி முதலாளிகளையும் அழைத்துப் பேசினார் ஜெயலலிதா. ஆனால், அவர்கள் விலையைக் குறைக்க ஒத்துக்கலை. உடனே,150 ரூபாய்க்கு அரசு சிமென்டை கொண்டுவந்தார். இதனால், சிமென்ட் கம்பெனிகளின் கொள்ளையும் தடுக்கப்பட்டது. அந்த வழியில் அரசே அரசு மணல் திட்டத்தை கொண்டு வரலாம். அதன்மூலம், தமிழகத்தில் உள்ள கட்டட கட்டுமான பணிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யணும். எக்காரணம் கொண்டும் வெளிமாநிலங்களுக்கு விற்கக் கூடாது. இதனால், ஆறுகளில் அதிகப்படியான மணல் அள்ளுவது தடை செய்யப்படும். அப்படி யாராவது சட்டத்தை மீறி மணல் அள்ளினால் அந்த வாகனங்களை சீஸ் பண்ணனும். அதேபோல், கட்டடத்தொழிலாளர்களை இந்த அரசு மதிப்பதே இல்லை.
கட்டடத் தொழிலாளர்களுக்கு டெல்லியை ஆளும் கெஜ்ரிவால் ஓய்வூதியமா 3000 தர்றார். ஆனால்,இங்கே 1000 தான் தர்றாங்க. மழைக்காலங்கள், இதுபோல் மணல் தட்டுபாடு ஏற்படும் காலங்களில் கட்டடத்தொழில் முடங்கிப் போகும். அந்தச் சமயத்தில் வேலையற்று இருக்கும் தொழிலாளர்களுக்கு மீனவர்களுக்கு, மண்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் அந்தக் காலங்களில் மட்டும் மாதம் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கணும். ஏன்னா, அரசுக்கு வரி மூலம் அதிக லாபத்தை தேடித் தருபவர்கள் கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள்.
காலியாக ஓர் இடம் இருந்தா, அதற்கு 150 ரூபாய்தான் வரி கட்டணும். இதே, அந்த இடத்தில் கட்டடம் கட்டப்பட்டால்,1500 ரூபாய் வரி கட்டணும். அந்தக் கட்டடத்தை கட்டுபவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் மூன்று விஷயங்களால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. செயற்கையான மணல் தட்டுப்பாடு, கட்டுமான பொருள்களின் விலை உயர்வு, வெளிமாநிலங்களுக்குத் தடையில்லாமல் மணல் கடத்துவது என்ற மூன்று விஷயங்களால்தான் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டிருக்கு. அதனால், தமிழக அரசு உடனடியாக இரண்டு கோடி கட்டடத் தொழிலாளர்களின் நலன்காக்க நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு மணல் திட்டத்தை கொண்டு வரணும். இல்லைன்னா, டெல்டா விவசாயிகள் போல் கட்டடத்தொழிலாளர்களும் கொத்துக் கொத்தாக குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலைவரும். கட்டட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உடனே தமிழக அரசு தூக்கி நிறுத்தணும். இல்லைன்னா,தொழிலாளர்களின் போராட்டம் தமிழகம் முழுக்க நடக்கும்" என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘கள்ளச்சாராயம் ஒழித்த அதே ஃபார்முலா வேண்டும்!’ - ஆறுகளைக் காப்பாற்ற ஒரு யோசனை
TAGS :
COMMENTS