[ad_1]





Namakkal: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த லலிதா என்பவர் வெங்கரையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் மகள் பூவிழி. 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதான லலிதா சேலம் அரசு மருத்துவமனையில் இறந்து போனார். கணவரை இழந்த லலிதா மகளுடன் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். லலிதா, இறந்தத் தகவலை அறிந்த வீட்டின் உரிமையாளர் பூவிழியை செல்போனில் தொடர்பு கொண்டு, தாயின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்று கூறியுள்ளார்.




வீட்டு உரிமையாளரின் எதிர்ப்பால் திகைத்துப் போன மாணவி, தாயின் உடலை ஆம்புலன்ஸிலேயே வைத்துக்கொண்டு, 5 மணி நேரம் மயானம் அருகே தவித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த லலிதாவின் உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார், வீட்டு உரிமையாளரை கடுமையாக எச்சரித்தனர். இறுதிச்சடங்கு செய்யவும் உறவினர்கள் வந்து போகவும் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்மாட்டோம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பூவிழி தாயின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு சென்றார். பின்னர், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு லலிதாவின் உடல் புதைக்கப்பட்டது. 


தந்தை இல்லாத நிலையில், தாயையும் இழந்து ஆதரவற்று நின்ற மாணவியிடம் வீட்டு உரிமையாளர் காட்டிய கடுமை அந்தப் பகுதி மக்களுக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");