[ad_1]





Pudukottai: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த வாரம் வரை செயல்பட்டுவந்த இலவச மனு எழுதும் மையம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த விவரம் தெரியாத சிலர், திறந்துவிடுவார்கள் என்று நம்பி, மணிக்கணக்கில் அங்கே காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். 





புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், திங்கள்கிழமைதோறும் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.  மனு எழுதத் தெரியாத அந்த மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், இலவசமாக மனு எழுதிக் கொடுக்கும் அலுவலகம் செயல்பட்டுவந்தது. இதற்காகப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, சேவை மனப்பான்மையுடன் அந்த அலுவலகம் செயல்பட்டுவந்தது. நேற்று, அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. மனு எழுத வந்தவர்களெல்லாம் வெளியில் சென்று மனு ஒன்றுக்கு முப்பது ரூபாய் கொடுத்து எழுதி வாங்கிவந்த அவலமும் நடந்தது.



இதுபற்றி நம்மிடம் பேசிய  சமூக ஆர்வலரான கனகராஜன், "கிராமத்து மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட தனித் தேவைகளுக்காகவும் குடிநீர், சாலை, டாஸ்மாக் கடைகளை அடைப்பது போன்ற பொதுக்காரியங்களுக்காகவும் கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்துவிட்டால், தங்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி வருகிறார்கள். அப்படி வருகிறவர்களுக்கு, எப்படி மனு எழுதுவது என்பது தெரியாது. அதற்கென்றே செயல்பட்டுவந்த இலவச மனு எழுதும் அலுவலகத்தை நம்பித்தான் நீண்ட தூரத்திலிருந்து மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு உதவிய அந்த அலுவலகத்தைப் பூட்டியது கண்டிக்கத்தக்கது.


 


சமீபகாலமாக, குறை தீர்ப்பு முகாமுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதில் பெரும்பாலானோர், இங்கு வந்துதான் மனுக்களை எழுதிக்கொண்டுபோகிறார்கள். அப்படி வருகிறவர்களைக் குறைக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அந்த அலுவலகத்தைப் பூட்டிவைக்க உத்தரவு போட்டிருக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. அதைப் பூட்டிவிட்டால், மக்கள் வரமாட்டார்கள் என்று கலெக்டர் நினைக்கிறாரா?" என்ற கேள்வியோடு முடித்தார். இதுகுறித்து விளக்கம் பெற அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். யாரும் முறையான பதில் கூறாமல் நழுவினார்கள்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");