[ad_1]





சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் தேடுதல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 




ஆர்.கே.நகரில் கட்டுக் கட்டாக  பணத்துடன் செல்வி என்ற பெண் சிக்கினார். டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான செல்வியை விடுவிக்கக் கோரி ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களை அவருக்குத் தெரிந்தவர்கள் முற்றுகையிட்டனர். காவல் நிலையத்துக்குள் நுழைந்து செல்வியை மீட்க டி.டி.வி.தினகரனின் ஆதரவு ஆள்கள் முயன்றனர். போதிய போலீஸ் இல்லாததால் தேர்தல் உயரதிகாரி விக்ரம் பத்ரா உத்தரவில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டது. துணை ராணுவத்தினர் யாரையும் காவல்நிலையம் அருகே வரவிடாமல் துப்பாக்கியுடன் சுற்றிலும் நின்று கொண்டனர். "வழக்கமான புகார் மனுக்களுடன் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை உள்ளே அனுப்புங்கள்" என்று அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர்.  ஆனால், துணை ராணுவப் படையினர், "ஜாவோ, ஜாவோ " என்று யாரையும் விடாமல் விரட்டியபடி இருந்தனர். தொடர்ந்து பதற்றமான நிலை தொகுதியில் காணப்படுவதால் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அந்தந்தக் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளை வரவழைத்து இன்று காலை 11.30 அளவில் ஆலோசனை நடத்தினார். "அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனின் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் பண விநியோகம் நடப்பதாக" தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் வீடியோ ஆதாரத்துடன்  புகார் அளித்துள்ளார். இக்கட்டான இந்த சூழ்நிலை காரணமாக ஆர்கேநகர் இடைத்தேர்தல் எந்த நேரமும் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");