[ad_1]
``தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ எப்போது வரும்?” என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி, சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன. மேலும் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையலாம் என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், இன்று நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்.
கனிமொழி எம்.பி பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரையில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்கின்றனர். ஆனால், அந்த மாணவர்கள் முதுகலைப் படிப்புக்குச் செல்ல விருப்பப்படும்போது அதற்கான இடங்கள் வெறும் 17 ஆயிரம் மட்டுமே உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ முதுகலைப் படிப்புக்கான சேர்க்கை இடங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நாம் குறைக்க வேண்டும். ஏனென்றால், தற்போது நிறைய மருத்துவமனைகளில் ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் ஒரு துறைக்கான சிறப்பு மருத்துவர்கள் இருப்பதில்லை. இந்த இடைவெளியை குறைப்பதற்காக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்பதையும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “இந்த ஆண்டு மட்டும் முதுகலை மருத்துவப் படிப்புக்காக 5,000 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகளவிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதே பெரிய விஷயம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான விஷயத்தில் அதன் அமைவிடம் தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்” எனக் கூறினார்.
``தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ எப்போது?”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
TAGS :
COMMENTS