[ad_1]
Chennai: அரசியல்வாதிகள், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் புரிந்த சாதனைகளின் மூலம் வரலாற்றில் தடம் பதிக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், தற்பொழுது நம்முன் நிற்கும் கேள்வி: விளையாட்டு வரலாற்றைப் புரட்டும்போது, நம்முடைய கிரிக்கெட் நட்சத்திரங்களின் இடம் என்னவாக இருக்கின்றது? கோலியின் இடம் என்னவாக இருக்கும்...?
சச்சின் டெண்டுல்கர் மிக நீண்ட காலத்துக்குத் தன்னுடைய ஆளுமையைச் சாதனைகள் மூலமாகத் தக்கவைத்துக்கொண்டவர். ஒவ்வொரு மாரத்தான் ஓட்டத்தையும் வென்ற மகத்தான வீரர் அவர். மற்றவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து ஒரு செல்பி எடுத்துத் திரும்பிக்கொண்டிருக்க, சச்சினோ எவரெஸ்ட்டில் 24 ஆண்டுகளாகக் கூடாரம் அமைத்து ராஜ்ஜியம் நடத்தியவர். 34,000 ரன்கள், நூறு சதங்கள் என்று அந்த எண்களே போதும், அவருள் இருந்த ஓர் அசாதாரணமான விளையாட்டு வீரரை அறிந்துகொள்ள.
சுனில் கவாஸ்கரோ ஒரு தேர்ந்த கலைஞனைப் போல. தன்னெதிரில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் தைரியமாக அடித்து ஆடியவர். இன்னொரு தளத்தில் நாம் கவாஸ்கரைப் பார்த்தால், அவர் ஒரு விஞ்ஞானியைப் போல; தன்னுடைய பேட்டிங்கை சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்தவர். முன்னும் பின்னும் தன்னுடைய நகர்வுகளை மாற்றி, குறுகலான பந்துகளைத் திறம்படத் தாக்கி, தன்னுடைய பேட்டிங் உத்திகளைக் கிட்டத்தட்ட ஒரு தேற்றம் போல வடிவமைத்தவர். இந்தியர்களின் கிரிக்கெட் பாணிக்கு மரியாதையைப் பெற்றுத்தந்தவர் கவாஸ்கர் என்றால் மிகையாகாது. இந்திய வீரர்களால் வேகப்பந்துகளையும் சமாளிக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர் அவர்.
தன்னிடம் கொண்டிருந்த நுட்பமான தனித்திறமையால், ஆட்டத்தில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் புகுத்தியவர் கபில் தேவ். மேற்கோள்காட்டத்தக்க ஒரு சுதந்திரத்தைத் தன்னுடைய அநாயசமான ஆட்டத்தில் வெளிப்படுத்தியவர் அவர். 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில், 27 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்று இந்திய அணி போராடிக்கொண்டிருந்தது. எட்டீ ஹெம்மிங்க்ஸ் வீசிய பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் விளாசி, 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அன்று அவர் அவ்வாறு செயல்படாதிருந்திருந்தால், இந்திய அணி உலகக்கோப்பையிலிருந்து வெளியேற நேர்ந்திருக்கும். நாம் ஏந்திய 'புருடென்ஷியல்' கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ஏந்திருப்பர். அந்த உலகக்கோப்பை வெற்றியை சாத்தியப்படுத்தியவர் கபில்! 16 ஆண்டுகளாகப் புன்னகையுடன் ஓர் ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் அவர்.
அவரைப் போல் அல்லாமல், மகேந்திர சிங் தோனி, வெகு அரிதாகவே களத்தில் புன்னைகைப்பார். 'அவரின் ரத்த அழுத்தம் நிரந்தரமாகவே 120/80 என நின்றுவிட்டதா' என்று எண்ணும் அளவுக்குக் களத்தில் நம்பமுடியாத நிதானத்தைக் கடைபிடித்தவர் அவர். 'அந்த நொடியின் தீவிரத்தை எப்பொழுதும் மூளைக்குள் ஏற்றிக்கொள்ளாதவர்' என்று கூறுபவர்களும் உண்டு. மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்த தோனியின் கதை, இன்றும் பல சுட்டிகளைப் பெரிய கனவுகள் காண உந்தித்தள்ளுகின்றது. இந்திய அணியை உச்சபட்ச கண்ணியத்தோடும் வசீகரத்தொடும் வழிநடத்திச் சென்றவர் அவர்.
கோலியும் சளைத்தவர் அல்ல என்று நிருபித்துக்கொண்டே இருக்கிறார். ஓர் ஆகச்சிறந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள, கோலி இன்னும் பயணிக்கவேண்டிய தொலைவு மிகக் குறைவாகவே உள்ளது. நடிகர் ஆமிர்கான் கதாபாத்திரங்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வதைப்போல, கோலியும் தனக்குத் தேவையான பரிணாமங்களை எளிதாக வடிவமைத்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ரன்களைக் குவித்துக்கொண்டிருக்கின்றார். இந்திய அணியின் தற்போதைய நம்பர் 4 வீரரான கோலி, காற்றைக் கிழித்துக்கொண்டு ஹைவேயில் பறக்கும் ஃபெராரி காரைப் போல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
விளையாட்டில் அவர் காட்டும் உக்கிரம், அபாரமான சக்தி, ரன்கள் குவிப்பதில் தீராத பசி என்று மற்றவரிடம் இருந்து எப்போதும் தனித்தே தெரிகின்றார். டெண்டுல்கரைப் பொறுத்தவரை, பேட்டிங் என்பது கடவுள் அளித்த வரமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கோலியோ, எதிராளியை வெல்வதைவிட, தன்னைத்தானே வெல்லும் முனைப்போடுதான் ஒவ்வொரு முறையும் விளையாடுகின்றார்.
கிரிக்கெட் நுணுக்கங்களைக் காட்டிலும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்தவர் கோலி. தடகள வீரராக இல்லாமல் ஒருவர் கிரிக்கெட் வீரராக இருப்பது இயலாத காரியம் என்பது கோலியுடைய பார்வை. ஆஸ்திரேலிய அணியைப் போல, ‘வெல்வதற்காக விளையாடுகின்றோம்’ என்று தன்னுடைய சக விளையாட்டு வீரர்களின் மனநிலையை ஒற்றை ஆளாக மாற்றி அமைத்தவர் அவர். அண்மையில் ரவிசாஸ்திரி கூறியதுபோல, இனியும் அவர்கள் ‘டைம் பாஸ்’க்காக விளையாட முடியாது.
இந்தியாவில் மிகவும் கொண்டாடப்பட்ட கிரிக்கெட் கேப்டன் டைகர் பட்டோடி. இந்திய கிரிக்கெட்டை முழுமையாக மாற்றி அமைத்தவர். வீரர்களை நன்றாக ஒருங்கிணைத்து, ஃபீல்டிங்கில் கவனம் குவித்ததன் காரணமாக, இந்திய அணி சுழற்பந்து வீச்சில் ஜொலிக்க ஆரம்பித்தது. அதைப்போல், போட்டியில் தீவிரத்தை முன்னிறுத்துவதும், உடற்பயிற்சியில் எவ்வித சமரசம் செய்துகொள்ளாமையும் கோலியின் ஆளுமைக்குச் சான்றுகள்.
இந்த ஆண்டு, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இங்கு வந்த அனைத்து அணிகளையும் வென்றுவிட்டார் கோலி. சொந்த மண்ணில் தன்னையும், தன் தலைமைப் பன்பையும் நிரூபித்துவிட்டார். ஆனால், ஒரு ஜாம்பவானாக கோலி அறியப்பட வேண்டுமெனில், அந்நிய மண்ணில் முத்திரை பதிக்கவேண்டும்.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று வெளிநாட்டுத் தொடர்கள் அணிவகுத்து நிற்பதால், அடுத்த 12 மாதங்கள் கோலியின் தலைமைப்பண்பையும் தனித்திறமையையும் சோதிக்கும் ஆண்டாக அமையும். அவரின் ஆளுமை சச்சின், பட்டோடி, இவர்களுக்கு இணையானதா என்பதும் தெரிந்துவிடும். 2018 - சச்சின் குடியிருந்த எவரெஸ்டில் கோலிக்கு நிரந்தர இடம் தருமா?
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் போல ஜாம்பவனாகக் கோலி என்ன செய்ய வேண்டும்?
TAGS :
COMMENTS