[ad_1]
தர்மபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.ம.க-வைச் சேர்ந்த டாக்டர் செந்தில். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி தனது பேஸ்புக்கில் பதிவிடுவது வழக்கம். அவர் 2ஜி அலைவரிசை குறித்து செய்துள்ள ஃபேஸ்புக் பதிவு பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் செந்திலின் ஃபேஸ்புக் பதிலிருந்து...
`2ஜி அலைவரிசை வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை ''தீக்குள் நுழைந்து தங்கள் தூய்மையை நிரூபித்திருப்பதாக’’ தி.மு.க மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்சிங் எங்களைப் பற்றிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். அருண்ஜெட்லி இதுப் பற்றி, இந்தத் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுடைய தூய்மைக்கான சான்றிதழ் அல்ல. உச்ச நீதிமன்றம் 112 நிறுவனங்களுடைய அலைவரிசை ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது. மேல்முறையீடு நிச்சயம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ராமதாஸ் சர்க்காரியா ஆணை அறிக்கையை நினைவூட்டி, `அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யக் கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். எனவே மேல் முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக இருந்த வினோத்ராய் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை முறையில் விட்டிருந்தால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும். இதனால் அரசுக்கு ரூ. 1,75,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சொல்லி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
வினோத்ராய் எழுதிய NOT JUST AN ACCOUNTANT என்றப் புத்தகத்தை நான் படித்தேன். அந்தப் புத்தகத்தை படித்தபோது ஏறக்குறைய விஜயகுமாரின் CHASING A BIRGAND - THE VEERAPPAN STORY என்ற புத்தகத்தைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வுகள்தான் எழுந்தன. அந்தப் புத்தகத்தின் NOT JUST AN ACCOUNTANT என்ற தலைப்பையே `நான் அதற்கும் மேலே' என்கிற ஒரு ஆணவத்தின் பிரதிபலிப்பாகத்தான் உணர்ந்தேன். புத்தகத்தை படிக்கத் துவங்கியதில் இருந்தே வினோத்ராய்க்கு தன்னைப் பற்றிய தலைக்கனம் இருந்ததை அறிந்துகொள்ள முடிந்தது.
வினோத்ராய் முதன் முதலாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கேரளாவில் பணியாற்றிய காலத்திலேயே அந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அதன் அமைச்சர்களையும்விட தான் அறிவாளியாகவும், நேர்மையாகவும் காட்டிக்கொள்ள முயற்சி செய்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட தான் உயர்ந்தவர் என்ற எண்ணத்தையும் காண முடிந்தது.
என்று நீளும் அந்த பதிவில்... வினோத் ராய் தன்னுடைய புத்தகத்தில் ‘நான் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி, நான் நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு கூட்டத்திற்கு செல்லும்போது முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராக வருகிற ஒருவரெல்லாம் எனனைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார். அவருக்கு என்ன தெரியும்’ எனப் பதிவிட்டிருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 15 லட்சம் மக்களுடைய பிரதிநிதி, அரசியல் அமைப்பின் மிக முக்கியமான அங்கம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைக் கேள்வி கேட்பதை, நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான குழுவான பொதுத் கணக்குக் குழுவின் (PUBLIC ACCOUNTS COMMITTEE) உறுப்பினர் கேள்வி கேட்பதையே தனக்குக் கீழான விஷயமாக நினைக்கிறவர் வினோத் ராய். அந்த அளவுக்கு ஆணவம் அவருக்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட அதிகாரிகள் ஜனநாயகத்திற்க்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் எதிரானவர்கள். என்று குறிப்பிட்டுள்ள டாக்டர் செந்தில். இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகலாம். திராவிட முன்னேற்றக் கழக குற்றவாளிகள் தண்டிக்கப் படலாம். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு எப்படியாக இருந்தாலும் இரண்டு விஷயங்களை என் அளவில் மகிழ்வோடு பார்க்கிறேன்.
1. வினோத்ராய் போன்ற கர்வம் பிடித்த அதிகாரிகளுக்கான மூக்கறுப்பாக நான் பார்க்கிறேன்.
2. எளிய குடும்பத்தில் பிறந்த, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு வழக்கை துணிவுடன் எதிர்கொண்டு, ஒரே ஒருமுறை கூட வாய்தா வாங்காமல் தொடர்ந்து உறுதியான கருத்துக்களைப் பேசி, ஒரு புன்னகையோடு வழக்கை சந்தித்து வெற்றி கண்டதையும் நான் மகிழ்ச்சியோடுதான் பார்க்கிறேன்.
ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள்தான் இனி இந்தியாவை வழி நடத்தும் என்ற எதிர்கால அரசியலின் துவக்கமாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் செந்தில் குறிப்பிட்டுள்ளது பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பேஸ்புக் பதிவு குறித்து டாக்டர் செந்திலிடம் பேசினோம், ``என்னுடைய கட்டுரையின் நோக்கம் தி.மு.க-விற்கோ ஆ.ராசாவுக்கோ ஆதரவான பதிவு அல்ல. இன்றைய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரால் நடைபெறும் தலித் அரசியலுக்கு ஆதரவாகவும் அல்ல. வினோத்ராய் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தலைக்கனம் கொண்ட அதிகாரிகளுக்கு எதிரனாது மட்டுமே'' என்று கூறினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆ.ராசாவுக்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு: பா.ம.க-வில் கிளம்பியுள்ள சர்ச்சை
TAGS :
COMMENTS