[ad_1]
ஒகேனக்கல்லுக்குத் தேர்வு விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா வந்த கர்நாடகவைச் சேர்ந்த 3 மாணவர்கள் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் 2ம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் தங்கள் தேர்வு விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கல்லுக்குச் சுற்றுலா வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட பகுதியான ஆலாம்பாடியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மகடி சேர்ந்த லட்சுமணன் மகன் சந்தோஷ் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கவனித்த அவரது நண்பர்கள் கனகபுரா சாத்தனூர் சேர்ந்த பாலாஜி மற்றும் உத்திரஅள்ளியைச் சேர்ந்த சாஷ் இருவரும் நண்பனைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது மூன்று பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸார் பென்னாகரம் டிஎஸ்பி அன்புராஜ், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முனுசாமி சம்பவ இடத்திற்கு வந்தனர். பரிசல் ஓட்டிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களைத் தேடியபோது சாஷ், பாலாஜி ஆகியோர் உடலை மீட்டனர். சந்தோஷ் உடல் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நண்பனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தவர்கள் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்! - ஒகேனக்கல் சுற்றுலாவில் நடந்த சோகம்
TAGS :
COMMENTS