[ad_1]
தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பேட்ஸ்மேன், டிவில்லியர்ஸ் விளையாடுவதில் குழப்பம் நிலவி வருகிறது.
கிட்டத்தட்ட 23 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த டிவில்லியர்ஸ், போர்ட் எலிசபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்-பேக் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளசிஸ் ஓய்வில் இருப்பதால், டிவில்லியர்ஸ் பேட்ஸ்மேனாக மட்டும் அல்லாமல், கேப்டனாகவும் களமிறங்கினார். தனது கம்-பேக் போட்டியில் அசத்தல் அரை சதமும் அடித்து அசத்தியுள்ளார் டிவில்லியர்ஸ்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அணியில் அவரது இடம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது டிவில்லியர்ஸ், `டுபிளிசிஸ்தான் இந்திய தொடருக்குத் தலைமை விகிப்பார். தற்போது, அணிக்கு ஒரு தலைவலி இருக்கிறது. நிறைய பேர் நன்றாக விளையாடி வருவதால், யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை நிராகரிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறோம். நான் விளையாடும் 11 பேர்களில் தேர்வு செய்யப்பட்டால், நான்காவதாக களமிறங்கக் காத்திருக்கிறேன். அப்படி இல்லை என்றால், அணியினருக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லப்போகிறேன்' என்று சூசகமாக கண்டிஷன் போட்டுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... டிவில்லியர்ஸ்ஸின் மறைமுக கண்டிஷன்!
TAGS :
COMMENTS