[ad_1]
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி பெறுவது மிகக் கடினமாகியுள்ளது. ஆனால், போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இலங்கை அணியின் கேப்டன் திசரா பெரேரா, `இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல் முறையாகத் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது' என்று கூறினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. 392 ரன்கள் அடித்துள்ள இந்திய அணியின் ஸ்கோரை எட்டிப்பிடிக்க இலங்கை சிரமப்படும் என்று கூறப்படும் நிலையில் போட்டிக்கு முன்னர் பேசிய பெரேரா, `இதுவரை இலங்கை அணி இந்தியாவில் தொடரை வென்றது இல்லை. எனவே, வரலாறு படைக்க எங்களுக்கு அருமையான வாய்ப்புக்கிட்டியுள்ளது. முதல் போட்டியில் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு, முதலில் இருந்த நாங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்தப் போட்டியில்தான் எங்கள் கவனம் இருக்க வேண்டும். மொகாலியின் கிரிக்கெட் பிட்ச் பேட்டிங்குக்கு ஏதுவாக இருக்கும். எங்களுக்கு இந்தப் போட்டியில் எந்த அழுத்தமும் இல்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடுவோம் என்று அனைவருக்கும் தெரியும்' என்று மிக நம்பிக்கையாகப் பேட்டியளித்திருந்தார். ஆனால், ரோஹித் ஷர்மாவின் அதகள பெர்ஃபாமன்ஸை பெரேரா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு!' - இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா?
TAGS :
COMMENTS