[ad_1]
Nellai: நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மேய்ச்சலுக்காக மேற்குத்தொடர்ச்சி மலைக்குச் சென்ற ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வன விலங்குகளின் தொல்லை அதிகரித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள புலி, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள், குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. செங்கோட்டைப் பகுதியில் அடிக்கடி சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து ஆடு, நாய்களை தூக்கிச்செல்கின்றன.
இந்த நிலையில், செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை பகுதியைச் சேர்ந்த முகம்மது கனி என்பவர், அடவிநயினார் அணைக்கட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றார். ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தபோது, இரு சிறுத்தைகள் அந்தப் பகுதிக்கு வந்துள்ளன. அதனைக் கண்ட முகம்மது கனி, அலறியடித்து ஓட்டம்பிடித்தார். கிராமத்துக்கு வந்த அவர், இதுகுறித்து மக்களிடம் தெரிவித்ததும், வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
அந்தப் பகுதிக்கு வந்த வனத்துறையினர், சிறுத்தைகள் நுழைந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது, 2 ஆடுகளை அடித்துத் தின்று விட்டதால், தோல்கள் மற்றும் எலும்புகள் மட்டுமே கிடந்தன. அந்தச் சிறுத்தைகள், ஓர் ஆட்டைக் கொன்று அங்கேயே போட்டுவிட்டுச் சென்றன. மேலும் ஒரு ஆட்டை அடித்து இழுத்துச் சென்றதற்கான தடம் கிடந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியின் அருகே சுற்றித்திரியும் சிறுத்தைகளைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அடுத்தடுத்து ஆடுகளை இரையாக்கும் சிறுத்தை! அச்சத்தில் செங்கோட்டை மக்கள்
TAGS :
COMMENTS