[ad_1]





ஊட்டியில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்ட அ.தி.மு.க கொடி கூலித்தொழிலாளி ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது.




 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை மறுநாள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, ஊட்டி முழுவதும் பேனர்களும், அ.தி.மு.க கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, உதகை அருகே கோடப்பமந்து என்ற பகுதியில், தோட்டம் ஒன்றில் பணிபுரியும் பாபு (44) என்ற கூலித்தொழிலாளி, இன்று மாலை உரம் இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு மின்சாரக் கம்பியுடன் இணைத்து கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க கொடி, மின்சார ஒயருடன் உரசிக் கொண்டு இருந்துள்ளது. இதுதெரியாமல், கொடிக் கம்பத்தைப் பிடித்த பாபு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்



ஏற்கெனவே, கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவின் மூலம் விபத்து ஏற்பட்டு ரகு என்ற மென்பொறியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");