[ad_1]
கும்பமேளா, மனிதகுலத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.
அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையிலும், நாசிக்கில் கோதாவரிக் கரையிலும், உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நிகழும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவர்.
உலகில் அதிகம்பேர் கூடும் ஆன்மிக நிகழ்வாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்த நிலையில், கலாசார பாரம்பர்ய நிகழ்வாக கும்பமேளாவை யுனெஸ்கோ அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், மதம் சார்ந்து மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் வரிசையில் கும்பமேளாவும் இணைந்துள்ளது. அந்தவரிசையில், போஸ்ட்வானா, கொலம்பியா, வெனிசுலா, மங்கோலியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, ‘மனித இனத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வு என்ற அங்கீகாரம் கும்பமேளாவுக்கு, யுனெஸ்கோ அமைப்பால் அளிக்கப்பட்டிருப்பது பெருமையான தருணம்’ என்று குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மனிதகுலத்தின் கலாசாரா பாரம்பர்ய நிகழ்வு கும்பமேளா! யுனெஸ்கோ அங்கீகாரம்
TAGS :
COMMENTS